Monday, August 21, 2006

வள்ளுவரின் நோக்கம் என்ன?

“மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்

வேண்டாப் பொருளும் அது.”

Meaning: மனைவி வழிப்படி விரும்பி நடப்பவன் பெரும் பயனடையான். செயல் செய்வார் அதற்கு தடையாக கருதுவதும் அதுவே.


“பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்

பெண்ணே பெருமை உடைத்து.”

Meaning: மனைவி கட்டளைப்படி நடக்கும் ஆடவனைவிட நாணமுடைய பெண்மையே மதிக்கத்தக்கது.

நான் குறள் படிப்பது தினசரியாக இல்லாவிட்டாலும், நல்வழியை படித்து பின்பற்றலாம் என்று மனம் வரும்போதெல்லாம் படிப்பேன்.

இருந்தாலும் சில குறளின் விளக்கம் தெரிவதில்லை. "பெண்வழிச்சேறல்" என்ற தலைப்பின் கீழ் வரும் குறள்களுடைய பொருளின் நோக்கம் என்னவென்று தெரியவில்லை.

உதாரணமாக 2 குறள்களை மேலே தந்துள்ளேன்-எல்லாவற்றிலும் ஒரு ஆடவன் மனைவியின் சொற்படி நடக்ககூடாது என்று தான் உள்ளது.

ஏன் பெண்கள் நல்லதை கூறமாட்டார்களா?

6 comments:

வல்லிசிம்ஹன் said...

fairy,
திருவள்ளுவர்
என்ன சொல்ல வருகிறார் என்று எனக்கும் புரியவில்லை.

நீங்கள் எடுத்த டாபிக் சரியாக இருக்கிறது.
பொருள் தெரிந்தவர்கள் சொல்ல வேண்டும்.நல்ல முயற்சி.
அந்தக் காலத்தில் இது வழக்கமாக இருந்ததோ? ஆனால் பெண் களால் முன்னேறிய வீடுகள் எத்டனையோ நான் பார்த்திருக்கிறேன். பார்த்து வருகிறேன்.

கஸ்தூரிப்பெண் said...

இதன் அர்த்தமாவது...

Those who lust after their wives will not attain anything. if you lust after strenous deeds you will acquire more wealth.


பெண்ணின் மேல் அளவுக்கதிக ஆசை வேண்டாம். காரியத்தில் கண்ணாயிரு வெற்றி மென்மேலும் வரும் என்பதே இதன் பொருள் ஆகும்.

இரண்டாவது குறளுக்கு....

உங்கள் அர்த்தமும் சரிதான். ஆனால் இதை இப்படி பார்க்கவேண்டும்.
கூஜாத்தூக்கி ஆணைவிட, நாணமுள்ள பெண் சிறந்தவள் என்று.

என்னோட பெண்ணிய உணர்வு சொல்வதோ....

பெண்ணை ஏவல் செய்யும் ஆணைவிட, நாணமுள்ள பெண் சிறந்தவள்.

FAIRY said...

நன்றி வள்ளி. ஆடவர்கள் நல்ல வழியில் சென்றால், பெண்களின் கருத்துக்கே இடம் இருக்காது என்று கஸ்தூரிப்பெண் சொல்கிற பதில் பொருள் தரும்.அப்பொழுது பெண்கள் பேசாமல் இருக்க வேண்டியது தான்.

FAIRY said...

கஸ்தூரிப்பெண் நீங்கள் சொல்வதெல்லாம் சரி. உங்கள் பதில் ஆடவருக்கு நல்லது. அப்படியானால் பெண்கள் எதிலும் தலையிட முடியாது. நாணம் கொண்டு பேசாமல் இருப்பது தான் அழகா? எதிலும் பெண்களின் யோசனையின் தேவையிருக்காது, அப்படித்தானே!

கஸ்தூரிப்பெண் said...

தேவதையே!

நான் ஆண் என்று சொல்லவில்லை, கூஜாத்தூக்கி ஆண் என்று சொன்னேன். அதாவது, பெண்ணிடம் கூழைக்கும்பிடு போடும், சுயபுத்தியில்லாமல் இருக்கும் ஆணைவிட நாணமுள்ள பெண் சிறந்தவள் என்பதே இதன் அர்த்தமாகும்.

பெண் யோசனை சொல்லவேண்டாம், கேட்கவேண்டாம் என்று இதன் அர்த்தமாகாது.

நீங்களே கூஜாத்தூக்கியாக நமது சகோதரர்கள் இருந்தால் உங்களுக்கு பிடிக்குமா?

FAIRY said...

பிடிக்காது தான். புரிந்தது, நன்றி கஸ்தூரிப்பெண்.