Saturday, September 23, 2006

நல்லவர்கள் தானே!

“இடுக்கட் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்”


தெளிந்த அறிவுடையோர், தான் துன்பப்பட நேர்ந்தாலும், இழிவான செயல்களில் ஈடுபடமாட்டார் என்பது இதன் பொருள்.

இதில் இழிவான செயல் தீய காரியங்களையும் வழிகளையும் குறிக்கும். இதில் கோபம், பொறாமை போன்ற உணர்ச்சிகளும் அடங்கியிருக்கிறது என்று தான் நினைக்கிறேன். இருந்தாலும், உணர்ச்சிகளை எல்லா நேரமும் அடக்க முடியாது தானே? அப்பொழுது நாம் என்ன தீயவர்களா? ஆனால், அதை உணர்ந்தால் நல்லவர்கள் தானே!

Monday, August 21, 2006

வள்ளுவரின் நோக்கம் என்ன?

“மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்

வேண்டாப் பொருளும் அது.”

Meaning: மனைவி வழிப்படி விரும்பி நடப்பவன் பெரும் பயனடையான். செயல் செய்வார் அதற்கு தடையாக கருதுவதும் அதுவே.


“பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்

பெண்ணே பெருமை உடைத்து.”

Meaning: மனைவி கட்டளைப்படி நடக்கும் ஆடவனைவிட நாணமுடைய பெண்மையே மதிக்கத்தக்கது.

நான் குறள் படிப்பது தினசரியாக இல்லாவிட்டாலும், நல்வழியை படித்து பின்பற்றலாம் என்று மனம் வரும்போதெல்லாம் படிப்பேன்.

இருந்தாலும் சில குறளின் விளக்கம் தெரிவதில்லை. "பெண்வழிச்சேறல்" என்ற தலைப்பின் கீழ் வரும் குறள்களுடைய பொருளின் நோக்கம் என்னவென்று தெரியவில்லை.

உதாரணமாக 2 குறள்களை மேலே தந்துள்ளேன்-எல்லாவற்றிலும் ஒரு ஆடவன் மனைவியின் சொற்படி நடக்ககூடாது என்று தான் உள்ளது.

ஏன் பெண்கள் நல்லதை கூறமாட்டார்களா?

Wednesday, August 09, 2006

அறிந்தவர்கள் கூறுக...

“தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்”


நீங்கள் கற்றதை எனக்கும் கூறி இன்பத்துடன் தெளிவு படுத்துங்கள்.

தினம்தோறும் காலையில் பொட்டு வைக்கும் போது யோசிக்கிறேன் - ஹிந்து பெண்கள்,சிறுமி முதல் வயதான பெண்கள் வரை நெற்றியின் நடுவில் பொட்டு வைப்பதன் பொருள் என்ன? இதை அறிந்தவர்கள் யாரேனும் பதில் தாருங்கள்.

Wednesday, August 02, 2006

கற்றதை கடைபிடிப்பது....

"கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக"


இன்று எத்தனை மனிதர்கள் இதை உணர்ந்து கற்ற நல்லவைகளை கடைபிடிக்கின்றனர் என்று நினைக்கின்றீர்கள்? என்னை பொறுத்த வரை கொஞ்சம் நல்லது தான் உலகில் உள்ளது.எல்லாம் மறந்து விட்டனர்.

Sunday, July 30, 2006

நன்றி

"நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று"

அமுதம் போன்ற இனிய தமிழுக்கு நன்றி,

என்னை இந்த blogger website க்கு அறிமுகம் செய்து வைத்த என் தோழி மழைக்கு நன்றி,

இங்கு வருகை தரும் அனைவருக்கும் என் நன்றி,

என் தமிழை பொறுத்து படிக்கும் தமிழர்களுக்கு நன்றி
.

முதல் வணக்கம்

"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு"

கடவுளுக்கு என் முதல் வணக்கத்தையும் நன்றியும் தெரிவித்து இந்த பிளாகை துவங்குகிறேன். இதற்கு உங்கள் நல்வரவை மகிழ்ச்சியுடன் ஏற்கும் உங்கள் தோழி. இதில் ஏதேனும் தவறு இருந்தால் அதை பொறுத்து, திருத்த முன்வரவும்.