திங்கள், ஆகஸ்ட் 21, 2006

வள்ளுவரின் நோக்கம் என்ன?

“மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்

வேண்டாப் பொருளும் அது.”

Meaning: மனைவி வழிப்படி விரும்பி நடப்பவன் பெரும் பயனடையான். செயல் செய்வார் அதற்கு தடையாக கருதுவதும் அதுவே.


“பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்

பெண்ணே பெருமை உடைத்து.”

Meaning: மனைவி கட்டளைப்படி நடக்கும் ஆடவனைவிட நாணமுடைய பெண்மையே மதிக்கத்தக்கது.

நான் குறள் படிப்பது தினசரியாக இல்லாவிட்டாலும், நல்வழியை படித்து பின்பற்றலாம் என்று மனம் வரும்போதெல்லாம் படிப்பேன்.

இருந்தாலும் சில குறளின் விளக்கம் தெரிவதில்லை. "பெண்வழிச்சேறல்" என்ற தலைப்பின் கீழ் வரும் குறள்களுடைய பொருளின் நோக்கம் என்னவென்று தெரியவில்லை.

உதாரணமாக 2 குறள்களை மேலே தந்துள்ளேன்-எல்லாவற்றிலும் ஒரு ஆடவன் மனைவியின் சொற்படி நடக்ககூடாது என்று தான் உள்ளது.

ஏன் பெண்கள் நல்லதை கூறமாட்டார்களா?

புதன், ஆகஸ்ட் 09, 2006

அறிந்தவர்கள் கூறுக...

“தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்”


நீங்கள் கற்றதை எனக்கும் கூறி இன்பத்துடன் தெளிவு படுத்துங்கள்.

தினம்தோறும் காலையில் பொட்டு வைக்கும் போது யோசிக்கிறேன் - ஹிந்து பெண்கள்,சிறுமி முதல் வயதான பெண்கள் வரை நெற்றியின் நடுவில் பொட்டு வைப்பதன் பொருள் என்ன? இதை அறிந்தவர்கள் யாரேனும் பதில் தாருங்கள்.

புதன், ஆகஸ்ட் 02, 2006

கற்றதை கடைபிடிப்பது....

"கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக"


இன்று எத்தனை மனிதர்கள் இதை உணர்ந்து கற்ற நல்லவைகளை கடைபிடிக்கின்றனர் என்று நினைக்கின்றீர்கள்? என்னை பொறுத்த வரை கொஞ்சம் நல்லது தான் உலகில் உள்ளது.எல்லாம் மறந்து விட்டனர்.